புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் மக்களை இவ்விவகாரத்தில் தூண்டி விட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் பணியை எதிர்கட்சினர் செய்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைக்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு இந்த ஆண்டு வெறும் 195கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் இதுவரை சுகாதார துறை நிதியில் இருந்து ஒரு ரூபாய் நிதியும் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும். முக்கியமாக கொரோனா நிதி எதுவும் இதற்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமானப்பணிகளை நிறுத்தினால் அதை நம்பி உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும்மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைக்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.