இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூட இல்லை, ஆனால் மசூதிகள் புனரமைக்க நிதி ஒதுக்கிய திமுக அரசு !

இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூட இல்லை, ஆனால் மசூதிகள் புனரமைக்க நிதி ஒதுக்கிய திமுக அரசு !

Share it if you like it

தமிழ்நாட்டில், மசூதிகள், மற்றும் இதர வக்ஃபு நிறுவனங்களில் பெரிய அளவிலான பழுதுபார்ப்பதற்கும் மற்றும் புனரமைப்பதற்கும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி 2023-2024-ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டு, நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (01.11.2023) நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை துவக்கி வைப்பதன் அடையாளமாக இம்மானிய தொகையினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் 25 வக்ஃபு நிறுவனங்களுக்கு பெருமராமத்து மானிய முதல் தவணைத் தொகையாக மொத்தம் ரூ.1,50,89,900/-ற்கான காசோலைகளை வழங்கினார். மேலும். 4 உலமா ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.3,000/- வீதம் மற்றும் ஒரு உலமா குடும்ப ஓய்வூதியதாரருக்கு மாதந்தோறும் தலா ரூ1.500/- வீதம் வழங்குவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு வக்ஃபு வாரியம் பொதுமக்களின் மனுவினை இணையதள வாயிலாக பெறுவதற்கும். உலமா ஓய்வூதியம் பெற விண்ணப்பம் பெறுவதற்கும், வக்ஃபு நிறுவனங்களின் முத்தவல்லிகள் வக்ஃபின் கணக்குகளை சமர்ப்பிக்கவும் மற்றும் சகாயத் தொகையினை இணையதளத்தின் மூலம் செலுத்துவதற்கும் ஏதுவாக www.tnwb.tn.gov.in என்ற இணையதள சேவையினையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., மாண்புமிகு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் திரு. M.அப்துல் ரஹ்மான் மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் திரு. இரா.ஜெய்னுலாப்தீன், தமிழ்நாடு வக்ஃபு வாரிய அலுவலர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மசூதிகள் மற்றும் இதர வக்ஃபு நிறுவனங்களை புனரமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்லமாட்டார். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it