தமிழ்நாடு மட்டுமல்ல… தமிழ்குடியரசு: சர்ச்சையை கிளப்பும் வரைபடம்!

தமிழ்நாடு மட்டுமல்ல… தமிழ்குடியரசு: சர்ச்சையை கிளப்பும் வரைபடம்!

Share it if you like it

தமிழ்நாடு மட்டுமல்ல… தமிழ்குடியரசு: சர்ச்சையை கிளப்பும் வரைபடம்!

சமீபகாலமாக தனி தமிழ்நாடு கோரிக்கை எழுந்துவரும் நிலையில், தற்போது தமிழ்குடியரசு என்கிற வரைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தனி தமிழ்நாடு கோரிக்கை எழுவது வழக்கமாக இருந்து வருகிறது. அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது இப்படியொரு கோரிக்கை எழுந்த நிலையில், காங்கிரஸ் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், அக்கோரிக்கை கைவிடப்பட்டது.

பின்னர், கருணாநிதி முதல்வராக இருந்போதும், தனித் தமிழ்நாடு கோரிக்கை அவ்வப்போது எழுவதுண்டு. எனினும், சில நாட்களில் அக்கோரிக்கை அப்படியே அடங்கிவிடும். ஆனால் தற்போதைய ஸ்டாலின் ஆட்சியில் இக்கோரிக்கை வலுவாக எழுந்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தி.மு.க.வினர் தமிழர்களை திராவிடர்கள் என்றும், தமிழகத்தை திராவிட நாடு என்றும், திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிவருகின்றனர். இதனிடையே, ஒரு நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்பினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் உட்பட பலரும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில், சென்னை கவர்னர் மாளிகையில், காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பது பிரிவினையை ஏற்படுத்துவது போல இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, திராவிட நாடு என்று கூறிவந்த தி.மு.க.வினர், இது தமிழகம் அல்ல தமிழ்நாடு என்று சமூக வலைத்தளங்களில் கதற ஆரம்பித்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர், கவர்னரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர். மேலும், கவர்னர் மீது ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமும் புகார் செய்தனர். இதையடுத்து, தான் தமிழகம் என்று கூறியதற்கான விளக்கத்தை கவர்னர் வெளியிட்டார்.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டை தமிழ்குடியரசு என்று சொல்லி ஒரு வரைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வரைபடத்தில், தமிழ்குடியரசு என்று அழைக்கப்படும் பகுதிகளாக காட்டப்பட்டிருக்கும் இடங்களில் தமிழ்நாடு முழுவதும் இடம்பெற்றிருப்பதோடு, இலங்கையின் சில பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. சமுக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வரைபடம்தான் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it