இந்த அன்பை போல வேறேது, வார்த்தைகள் எல்லாம் போதாது !

இந்த அன்பை போல வேறேது, வார்த்தைகள் எல்லாம் போதாது !

Share it if you like it

சத்தீஸ்கரில் உள்ள காங்கேரியில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பொது மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, கூட்டத்தில் இருந்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடியை வரைந்தார். இது பிரதமரின் பார்வைக்கு சென்றது. அந்த ஓவியத்தை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததுடன், சிறுமிக்கு கடிதம் எழுதுவதாகவும் உறுதி அளித்தார். இந்நிலையில், கான்கேர் பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற சிறுமிக்கு பிரதமர் மோடி தனது கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-

அன்புள்ள அகன்க்ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துகளும், ஆசிர்வாதங்களும். கான்கேருக்கு நீங்கள் கொண்டு வந்த ஓவியம் என்னை அடைந்தது. இந்த அன்பான வெளிப்பாடுக்கு மிக்க நன்றி. நீங்கள் சிறந்த வெற்றியுடன் முன்னேறி, உங்கள் வெற்றிகளால் உங்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும். உங்கள் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்

இந்தியாவின் மகள்கள் நாட்டின் ஒளிமயமான எதிர்காலம். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெறும் இந்த பாசமும் சொந்தமும் தேச சேவைக்கு எனது பலமாகும். எங்கள் மகள்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அனைத்தும் நிறைந்த தேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். சத்தீஸ்கர் மக்களிடம் நான் எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டின் முன்னேற்றப் பாதையில் மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர்.


Share it if you like it