உதயநிதி அறிவு சார்ந்த பிம்பமா? பங்கம் செய்த சூர்யா!

உதயநிதி அறிவு சார்ந்த பிம்பமா? பங்கம் செய்த சூர்யா!

Share it if you like it

பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் உதயநிதி குறித்த கேள்விக்கு பா.ஜ.க ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா பங்கம் செய்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகனாக இருப்பவர் சூர்யா. தி.மு.க.வில் உள்ள குடும்ப ஆதிக்கம் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அண்மையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டவர். இதையடுத்து, பிரபல ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார். அந்தவகையில், தி.மு.க.வின் தில்லாலங்கடி தனங்களை தொடர்ந்து தோலுரித்து வருகிறார். இந்தநிலையில், பிரபல இணையதள ஊடகமான பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசியதாவது;

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றுமே பேச தெரியாது. அவரிடமிருந்து, பேப்பரை பிடுங்கி விட்டால் பே பே பே தான்.. முன்னாள் துணை முதல்வர், மேயர் மற்றும் தற்பொழுது முதல்வராக இருக்கிறார். அவரை, இப்படி பேசலாமா என தம்பி ஒருவர் திருச்சி சூர்யாவிடம் கேட்கிறார். அறிவு இருந்ததால் மட்டுமே ஸ்டாலினுக்கு பதவி கிடைத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதிகாரத்தில் அவர் அப்பா இருந்ததால் மட்டுமே அவருக்கு பதவி கிடைத்தது. இவர், தனது மூளையை பயன்படுத்தியா கட்சி பதவிக்கு வந்தார்.

உதயநிதி ஸ்டாலினை அறிவு சார்ந்த பிம்பமாக நீங்கள் பார்க்கிறீர்களா? அப்படியெல்லாம், நான் பார்க்கவில்லை. 100% அரசியல் வாரிசு தான். அவர்களிடம் கட்சி டிரஸ்ட் இருக்கு, இளைஞர் அணி டிரஸ்ட் இருக்கு, கொள்ளை கொள்ளையா அவர்களிடம் பணம் இருக்கு. மற்றவர்களை நம்பி கட்சி டிரஸ்ட்-டை ஒப்படைக்க மாட்டார்கள். தனது குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். எனது மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார் என ஸ்டாலின் அவரது சொந்த ஊடகத்தில் தான் கூறினார். இப்பொழுது, அவருக்கு மந்திரி பதவியை கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்து ஓடிகிட்டு இருக்கு. அவர் எல்லாம் சிறந்த அரசியல்வாதி கிடையாது சினிமா துறையில் இருந்து அவர் வந்துள்ளார். திரைப்படங்கள் நடிக்காமல் அரசியலுக்கு வந்திருந்தால் மக்கள் அவரை விரட்டியடித்து இருப்பார்கள் என உதயநிதியை பங்கம் செய்து அக்காணொளியில் பேசியுள்ளார்.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it