அக்கா, அம்மா எல்லாம் காஃபிர்களின் பழக்கம்: இஸ்லாமிய அடிப்படைவாதியின் சர்ச்சை பேச்சு!

அக்கா, அம்மா எல்லாம் காஃபிர்களின் பழக்கம்: இஸ்லாமிய அடிப்படைவாதியின் சர்ச்சை பேச்சு!

Share it if you like it

மற்றவர்களை அம்மா, அக்கா என்று அழைப்பது காஃபிர்களின் பழக்கம். அது இஸ்லாத்தில் இல்லை என்று இஸ்லாமிய பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாத்தில் ஜாதி இல்லை, ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று ஊர் முழுக்க தி.க., தி.மு.க., திருமாவளன் போன்றவர்கள் மேடைதோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த மதத்தில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் பற்றி இவர்கள் வாய் திறப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காஃபிர்கள். அவர்களின் உடைமைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொள். இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்களின் தலையை வெட்டு என்று மதவெறி பிடித்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பேசிவரும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

அந்த வகையில், நம் உடன் பிறந்தவர்களை மட்டுமே அக்கா, அண்ணன், தம்பி என்று அழைக்க முடியும். என் மனைவியின் அம்மாவை மட்டுமே மாமி என்று அழைக்க முடியும். மற்றவர்களை அக்கா என்றோ, அண்ணன் என்றோ, அம்மா என்றோ அழைப்பது காஃபிர்களின் பழக்கம். அது இஸ்லாத்தில் கிடையாது என்று இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் பேசியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவரின் இந்த கருத்தை திருமாவளனும், தி.மு.க., தி.க.வைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it