ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழுவை நியமித்தது.
இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்
குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்களிடம் இருந்து சுமார் 5000 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.