கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், என்று மிக தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில். கர்த்தர் கிருபை நமக்கு இருப்பதால். கொரோனா கிருமி நம்மை, ஒன்றும் செய்ய முடியவில்லை என்று. கிறிஸ்தவர்கள் குழுமி இருந்த கூட்டத்தில் மதபோதகர் கூறியது கடும் சர்ச்சையை தமிழகத்தில் கிளப்பி இருந்தது.
ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், என்று எதனையும் பார்க்காமல். உலகையே புரட்டி எடுத்து வருகிறது கொரோனா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை மிக இக்கொடிய கிருமியை அழிக்க மிக தீவிரமாக போராடி வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கொரோனா தடுப்பூசி குறித்து அக்காணொளியில் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த தடுப்பூசி உங்களுக்கு கொரோனாவை கொண்டு வராது என்பது சந்தேகமானது. இது உறுதியானது அல்ல. WHO – (World Health Organization) மற்றும் Icmr -( Indian Council of Medical Research) யாரும் இதற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை. அல்லாவால் மட்டும் தான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். கொரோனா தடுப்பூசி சந்தேகமானது என்று இஸ்லாமிய மதபோதகர் பேசி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Religious leader advocating against the Corona Vaccine, Govts must talk with such people and make them understand its need and importance to ensure that it reaches all communities .@PMOIndia .@mkstalin Please do the needful pic.twitter.com/9b259OW8ul
— Vishwatma 🇮🇳 (@HLKodo) May 10, 2021