வெஜிடேரியன் என்று பெயர் பலகை வைப்பது முஸ்லிம்களுக்கு எதிரானது.
இஸ்லாமிய மதகுரு ஒருவர் Only Vegetarian என்று பல இடங்களில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது இந்திய அரசியலமைப்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று அவர் பதிவு செய்த காணொளி மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. இங்கு சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும். அசைவ உணவுகள் கிடையாது என்பதை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்டவே “Only Vegetarian” என்று பெயர் பலகை வைக்கப்படுகிறது.
வெஜிடேரியன் உணவகத்தில் அசைவ உணவு உண்பவர்களுக்கு அனுமதி இல்லை, அவர்களை எப்பொழுதும் நுழைய விடமாட்டோம் என்று கூறினால் அந்த உணவகத்திற்கு எதிராக கருத்து கூறலாம், ஏன்? வழக்கு கூட போடலாம். ஆனால் இது பற்றி எந்தவிதமான குற்றச்சாட்டுகளும், புகார்களும், இன்று வரை எழாத நிலையில். வெஜிடேரியன் என்று பெயர் பலகை வைப்பது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று இஸ்லாமிய மதகுரு ஒருவர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது ’ஹலால்’ எனவே அது சார்ந்த பெயர் பலகை வைக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கிளம்ப ஆரம்பித்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.