பாரத நாடு
அந்நிய சக்திகளிடம் இருந்து
விடுதலை பெற வேண்டுமென தன்னுயிர் நீத்த தியாகிகளில் மிகவும் முக்கியமானவர்
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள்.
காரணம் பாரத தேசத்தை தாயாகவும் அதையும் தாண்டி கடவுளாகவும் நேசித்த அவரது உள்ளத்தில்
பாரத அன்னைக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் அதன் மூலம் வரும் காலங்களில் அன்னிய சக்திகள் இல்லாத பாரதம் அமையும் என்பதே தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் கனவாக இருந்தது. அதற்காக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி பாரத மாதா கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
பிரிட்டிஷ்காரர்களின் கொடுமையின் காரணமாக தொழுநோய் கொண்டிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் மரணமடைந்தார். பின்பு பாப்பாரப்பட்டி பகுதி மக்கள் அவ்வப்போது அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.குமரி ஆனந்தன் அவர்களும்,இராம.கோபாலன்ஜி அவர்களும் இதற்காக பல முயற்சிகள் செய்தனர்.
அதன் காரணமாக ஏதோ ஒன்றை கட்டி இதுதான் கோவில் என அரசு அலுவலர்கள் தெரிவித்து வந்தார்கள். சென்ற அ.தி.மு.க அரசானது 2020இல் பாரதமாதா கோவில் போன்ற ஒன்றை கட்டி முடித்தனர்.
இந்த இடத்தில் 1.8.2021 ஞாயிறு அன்று தற்போதைய தி.மு.க அரசானது எந்த அறிவிப்பும் இல்லாமல் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.வே சாமிநாதனை வைத்து மாலை 6 மணிக்கு கோவில் திறப்பதாக
மதியம் மூன்று மணிக்கு செய்தி வெளியானது.
அதிலும், 6 மணிக்கு பாரத நூலகம் திறப்பதாக சொல்லிய அமைச்சர், இரவு 7. 15 மணி அளவிற்கு பாரத மாதா கோவிலுக்கு வந்தார். இரவு 7 மணி 20 நிமிடத்திற்கு துவங்கிய நிகழ்ச்சி 7.30 முடிவடைந்தது. அதாவது 10 நிமிடத்தில் முடிவடைந்தது.
ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் நூற்றாண்டு கனவினை, வெறும் பத்தே நிமிடத்தில் திருட்டு கல்யாணம் நடப்பது போல், உள்ளூர் மக்களை கூட அழைக்காமல், முடித்து வைத்துள்ளது இந்த ஹிந்து விரோத திமுக அரசு.
அதுவும் அதிமுக அரசு கட்டிய இந்த கட்டிடத்திற்கு பாரதமாதா “நினைவு ஆலயம்” என பெயரிட்டுள்ளது, திமுக அரசு. நினைவாலயம் என்பது இறந்தவர்களை குறிப்பது ஆகும். எனவே இவர்கள் மக்கள் மனதில் எதை பதியவைக்க முயற்சிக்கின்றனர் என்பது கேள்விக்குறியே.