இந்திய மக்களை மீட்க அதிரடியாக களமிறக்கும் ஆபரேஷன் அஜய் !

இந்திய மக்களை மீட்க அதிரடியாக களமிறக்கும் ஆபரேஷன் அஜய் !

Share it if you like it

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் பெண்கள் முதியவர்கள் என பல பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இஸ்ரேலும் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பெரும் பாலஸ்தீன மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து,அமெரிக்கா,ஜெர்மனி என பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து கூறியுள்ளார். இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களை மீட்க மத்திய அரசும் வெளியுறவு துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் எங்கள் குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக #OperationAjay தொடங்கப்படுகிறது. சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இவ்வாறு வெளியுறவு அமைச்சர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it