பாகிஸ்தான் பல துண்டுகளாக உடைய வாய்ப்பு ”ஹாங்காங்” பத்திரிகை பகீர் தகவல்..!

பாகிஸ்தான் பல துண்டுகளாக உடைய வாய்ப்பு ”ஹாங்காங்” பத்திரிகை பகீர் தகவல்..!

Share it if you like it

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ‘ஏசியன் டைம்ஸ்.’ எனும் ஆன்லைன்’ பத்திரிகையில், இர்பான் ராஜா உள்ளிட்ட சில பாகிஸ்தான் அரசியல் வல்லுனர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில்

1947ல், இந்தியாவை உடைத்து இரண்டாக பிரித்து பாகிஸ்தான் தனி நாடாக உருவானது முதல் இதுவரை, அது தனக்கான இலக்கை, 73 ஆண்டுகள் கடந்தும் எட்டவில்லை.

முஸ்லீம் நாடாகவோ, ஜனநாயக நாடாகவோ, இப்போது வரை மாறவில்லை. ஆனால், சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின், கொள்கைகளை விமர்சிப்பவர்கள், அடுத்த நிமிடமே வெளிநாடுகளின் ஏஜன்ட்களாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில், சமத்துவம் என்பது பேச்சு அளவில் கூட இல்லை என்பதை, முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதே போன்ற சூழலால் தான் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம் உள்நாட்டுப் போரால் தனி நாடாகப் பிரிந்தது. அதே போன்றதொரு சூழ்நிலை தற்போது பாகிஸ்தானில் பெருகியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போரை சந்தித்து மேலும் பல துண்டுகளாக உடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது..


Share it if you like it