ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் நேற்றும், இன்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ நாடுகளில் டிசம்பர் மாதம் 25-ம் தேதிதான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். ஐரோப்பா நாடுகளான உக்ரைன், செர்பியா, மாண்டினீக்ரோ, ரஷ்யா மற்றும் பெலாரஸ், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் சில பகுதிகள் மற்றும் எகிப்து மற்றும் எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனவரி 6-ம் தேதிதான் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். அதாவது, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க, கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் தனித்தனி நாட்காட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட விழாக்களின் வேறுபாடுகளுக்குக் காரணம். அதாவது, 1582-ல் 8-வது போப் கிரிகோரியால் அறிமுகப்படுத்தப்பட்டது கிரிகோரியன் நாட்காட்டி. இது உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிவில் நாட்காட்டியாகும். இதன்படிதான், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.
அதேசமயம், மேற்கத்திய கிறிஸ்தவர்களான கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்கள் உள்ளிட்டோர் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின்படி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். எனினும், 1923 இல் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் மற்றும் உக்ரேனிய விசுவாசிகளின் சில பகுதிகளைத் தவிர்த்து மற்றவர்கள் இன்றும் ஜூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றனர். இது ஒரு சூரிய நாட்காட்டியாகும். இது கி.மு. 46-ல் ஜூலியஸ் சீசரால் செயல்படுத்தப்பட்டது. இது கிரிகோரியன் எண்ணை விட 13 நாட்கள் தாமதமானது. ஜூலியன் நாட்காட்டியை முதன்முதலில் வகுக்கையில், ஒரு சிறிய தவறான கணக்கீட்டால் கிட்டத்தட்ட 2 வார இடைவெளியானது ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் 2,100-ம் ஆண்டு இறுதியில் ஜனவரி 8-ம் தேதியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களே மாறி மாறி கொண்டாடி வருவது சற்றே விசித்திரமாக பார்க்கப்படுகிறது.