நிருபர் கேட்ட கேள்விக்கு முறையான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசிய ப.சிதம்பரத்தின் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிவுஜீவி, பொருளாதார மேதை, என்று காங்கிரஸ் கட்சியினரால் அழைக்கப்படுபவர் ப.சிதம்பரம். இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பவர். ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அனுமதி அளிப்பதற்காக ரூபாய் 305 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் சுமார் 100 நாட்கள் சிறையில் கழித்தவர். இதுதவிர, இவர் மீது பல்வேறு ஊழல் புகார்களும், குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன. “நேஷனல் ஹெரால்டு ஊழல் புகார் தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ள கூடாது என தனது கடும் கண்டனத்தை தெரிவித்தவர்.
இதுதவிர, தனது சொந்த கட்சிகாரருக்கு இழைக்கப்பட்ட, அநீதிக்கு எதிராக போராடாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மாற்று கட்சியை சேர்ந்தவருக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர். இதனை தொடர்ந்து, அதே காங்கிரஸ் கட்சியினரால் நீதிமன்றத்தில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நேற்றைய தினம் பேரணி நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியை ரிபப்ளிக் டிவி நேரடியாக ஒளிபரப்பியது. அந்த வகையில், ரிபப்ளிக் ஊடகத்தின் நிருபர் ராகுல், நேஷனல் ஹெரால்ட் ஊழல் குறித்து ப.சி.யிடம் கேள்வி ஒன்றினை முன்வைத்து இருக்கிறார். இதற்கு, ப.சிதம்பரம் உங்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் என்ன செய்வது என நிருபருக்கு பதில் அளித்து இருக்கிறார்.
“ஐயா எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும், எனது கேள்விக்கு பதில் கூறுங்கள் என மீண்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார். உங்களுக்கு, ஆங்கிலம் புரியவில்லை நான் என்ன செய்வது என மீண்டும் அதே பதிலை ப.சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பார்த்து ஏன்? அந்த கேள்வியை கேட்ட என்பது போல ப.சிதம்பரம் ஓடிய காணொளி தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.