நெல் கொள்முதலுக்கு ஏஜென்ட் நியமித்து கட்டாய வசூல்: தொடரும் தி.மு.க. நிர்வாகிகளின் அராஜகம்!

நெல் கொள்முதலுக்கு ஏஜென்ட் நியமித்து கட்டாய வசூல்: தொடரும் தி.மு.க. நிர்வாகிகளின் அராஜகம்!

Share it if you like it

தி.மு.க. நிர்வாகிகள், நெல் கொள்முதலுக்கு ஏஜென்ட் நியமித்து 50 ரூபாய் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை, மேற்கண்ட கொள்முதல் நிலையங்களில் விற்று பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் ரெய்டு நடத்தி நெல் கொள்முதல் நிலையங்களில் வசூலில் ஈடுபட்ட 90-க்கும் மேற்பட்ட பணியாளர்களை சஸ்பெண்ட் செய்தனர். ஆனாலும், பணம் வசூலிப்பது மட்டும் நிற்கவே இல்லை.

இந்த நிலையில்தான், தி.மு.க. நிர்வாகிகள் ஏஜென்ட்டை நியமித்து கட்டாய வசூலில் ஈடுபட்டிருப்து தெரியவந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குணகரம்பாக்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் தி.மு.க. ஏஜென்ட் ஒருவர் பணம் வசூலித்துக் கொண்டு வந்து கொடுப்பதை விவசாயிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில் வசூலில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


Share it if you like it