மத்தியில் பா.ஜ.க அரசு வந்ததில் இருந்தே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். பாகிஸ்தானை தனிமைப்படுத்த சர்வதேச அளவில் பல முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டது.
மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு கீரிடம் வைத்தாற்போல், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதி உதவியை அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் நிறுத்தினர். பின்னர் அமெரிக்க தேர்தலில் நிலைமை மாறி புதிய அரசு பொறுப்பேற்றது.
இதனால் மகிழ்ந்து போன பாகிஸ்தான் தனக்கு மீண்டும் ராணுவ நிதியை அமெரிக்கா கொடுக்கும் என பகல் கனவில் மிதந்தது. ஆனால் அதில் மண்ணள்ளி போட்டது போல் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை தொடர முடிவெடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகனின்’ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் பாகிஸ்தானிடம் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. அதனால் ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை இந்த ஆண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. என கூறினார்