பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பலுசிஸ்தான் போராளிகள்: 6 வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பலுசிஸ்தான் போராளிகள்: 6 வீரர்கள் உயிரிழப்பு!

Share it if you like it

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை பலுசிஸ்தான் போராளிகள் குழு சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், பயணம் செய்து லெப்டினன்ட் ஜெனரல் உட்பட 6 பேரும் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கடந்த 1-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இதில், குவெட்டா கார்ப்ஸ் கமாண்டரி லெப்டினென்ட் ஜெனரல் சர்ஃப்ராஸ் அலி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. திடீரென காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது, பலுசிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேருமே உயிரழந்து விட்டனர்.

முதலில் இது ஒரு விபத்து என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால், பின்னர்தான் தெரியவந்தது மேற்படி ஹெலிகாப்டரை பலுசிஸ்தான் போராளிகளான பலுச் ராஜி ஆஜோய் சங்கர் என்கிற அமைப்பு சுட்டு வீழ்த்தி இருக்கும் விவகாரம். இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பலோச் கான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பலுசிஸ்தானின் விண்டருக்கும் நூரானிக்கும் இடையே உள்ள மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டரை பலுச் ராஜி ஆஜோய் சங்கர் அமைப்பினர் தாக்கி அழித்தனர்.

விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஹெலிகாப்டர் மோசமாக சேதமடைந்து, தாரேஜியில் உள்ள மூசா கோத் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் இருந்த லெப்டினென்ட் ஜெனரல் சர்ஃபராஸ் அலி, பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் (டி.ஜி. கடலோர காவல்படை), மேஜர் சயீத் (விமானி), மேஜர் தல்ஹா (இணை விமானி) மற்றும் நாயக் முதாசிர் (குழு தலைவர்) ஆகிய 6 எதிரிகளும் கொல்லப்பட்டனர். இதில், லெப்டினன்ட் ஜெனரல் சர்ஃப்ராஸ் அலி, பலுசிஸ்தான் ராணுவ உளவுத்துறையின் டைரக்டர் ஜெனரலாகவும், எல்லைப்புற கார்ப்ஸ் தெற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் இருந்தார்.

மேலும், சர்ஃப்ராஸ் அலி பலுச் இனப்படுகொலை மற்றும் பலுச் மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டவர். இத்தாக்குதலுக்குப் பிறகு பலுச் போராளிகள் தங்களது பாதுகாப்பான இடங்களை வெற்றிகரமாக அடைந்து விட்டனர். பலூச் சுதந்திர போராட்ட வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தாக்குதலுக்கு பொறுப்பேற்பது தாமதமானது. பலுசிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் முழுவதுமாக வெளியேறி, பலூச் சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை தாக்குதல் நடத்தப்படும்” என்று பலோச் கான் தெரிவித்திருக்கிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.


Share it if you like it