பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 3 சகோதரிகளை கடத்திச் சென்று, மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஹிந்து பெண்களை பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் கடத்திச் சென்று, மதம் மாற்றி, கட்டாயத் திருமணம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தார்கி கிராமத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இக்கிராமத்தைச் சேர்ந்தவர் லீலா ராம். வியாபாரியான இவருக்கு சாந்தினி, ரோஷினி, பரமேஸ்குமாரி என 3 மகள்கள். இவர்கள் 3 பேரையும், 3 பேர் அடங்கிய முஸ்லீம் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர், 3 சகோதரிகளையும் முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதுடன், கட்டாய திருமணமும் செய்தனர். இதுகுறித்து லீலா ராம் போலீஸில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
சமீபத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் பெண் சீமா ஹைதர், தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவிலுள்ள தனது காதலன் சச்சினிடம் தஞ்சமடைந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே, கராச்சியில் 2 ஹிந்து கோயில்களை மீது தாக்குதல் நடத்தி தகர்த்தனர். அதேபோல, ஹிந்து பெண்களை குறிவைத்து கடத்திச் சென்று மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்யும் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.