பயங்கரவாதத்துக்கு நிதி… ‘கிரே’ பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்?!

பயங்கரவாதத்துக்கு நிதி… ‘கிரே’ பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்?!

Share it if you like it

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, ஆசியா, பசிபிக் குழு நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க, எஃப்.ஏ.டி.எஃப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பதில், நாடுகளின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிடுகிறது. இந்த அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில்தான், அந்தந்த நாடுகளுக்கு சர்வதேச அமைப்புகளின் நிதியுதவி கிடைக்கும். அந்த வகையில், இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், அண்டை நாடான பாகிஸ்தான் ‘கிரே’ எனப்படும் நடவடிக்கைகள் எடுப்பதில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் உள்ளது. ஆகவே, பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இப்பட்டியலில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு 2018-ம் ஆண்டு 34 அம்ச இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த சூழலில், ஐரோப்பிய நாடான பிரான்ஸின் பாரிஸ் நகரில் எதிர்வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை, எஃப்.ஏ.டி.எஃப். கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில், ‘கிரே’ பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், எஃப்.ஏ.டி.எஃப்.பின் துணை அமைப்பான, ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசியா, பசிபிக் குழு புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், சர்வதேச இலக்குகளில் 11-ல் 10-ல் பாகிஸ்தானின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும், இந்த அறிக்கை எஃப்.ஏ.டி.எஃப். எடுக்கவிருக்கும் முடிவைக் கட்டுப்படுத்தாது என்று தெரிகிறது.


Share it if you like it