பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்!

பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று முடக்கி வைத்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டு அரசுக்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ‘Govtofpakistan’ என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. இப்பக்கத்தில் அந்நாட்டின் செயல்பாடுகள் குறித்து, பாகிஸ்தான் அரசு பகிர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் இன்று முதல் முடக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கத்தை முடக்கி வைத்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதத்திலும் பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எதற்காக பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அதேசமயம், ஒரு நாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் இதுபோன்று கணக்குகளை முடக்கி வைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், 4 பேஸ்புக் பக்கங்கள், 5 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 3 இன்ஸ்டாகிராம் கணக்குகளை மத்திய அரசு இதுவரை முடக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதற்கு பி.எஃப்.ஐ. ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Share it if you like it