சமீபத்தில் ICC உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்திய அணி போராடி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இதனால் மைதானமே மயான அமைதியில் ஆழ்ந்தது. மேட்ச் முடிந்த பின்பு இந்திய அணி வீரர்களின் ஓய்வறைக்கு சென்று கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. சமூக வலைத்தளத்திலும் இதுதொடர்பாக குறிப்பிருந்தார். அதில் நாங்கள் உங்களுடன் இன்றும் எப்போதும் துணை நிற்போம் என்று பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்திய அணி குறித்தும் மோடி குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ள காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ஒரு தேசமாக நாடே இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான நேரம். இந்திய அணி வீரர்களுடன் தான் இருப்பதாக உங்கள் பிரதமர் மோடி தெளிவான செய்தி அளித்துள்ளார். தனது குழந்தைகளாக வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார். இது பிரதமர் மோடியின் சிறந்த செயல். இவ்வாறு சோயப் அக்தர் பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர் !
Share it if you like it
Share it if you like it