லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் சேருகிறது பா.ம.க., இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.
லோக்சபா தேர்தல் தேதியை கடந்த 15-ம் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு ஏப். 19-ம் தேதி நடக்கிறது.
இத்தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள நிலையில், இன்று பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க., மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் இன்று (மார்ச்.18) இரவு அளித்த பேட்டி, வரப்போகும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., பா.ம.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும், தொகுதி பங்கீடு குறித்தும் , யார் யார் வேட்பாளர் குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.