மஹாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் உள்ள கோவிலில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. அதில் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை தாங்க, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் ஊராட்சி தலைவர் பூங்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மையப்பன் என்கிற விவசாயி பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் எழுந்து வந்து தரையில் அமர்ந்திருந்த விவசாயி அம்மையப்பனை ஆக்ரோஷமாக காலால் எட்டி உதைத்தார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அம்மையப்பன். அதன்பிறகும் தங்கப்பாண்டியனின் ஆதரவாளர்கள் அம்மையப்பனை சரமாரியாக தாக்கினர். பின் சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்
அம்மையப்பன். இச்சம்பவத்திற்கு பிறகு ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தலைமறைவானார்.
அவரை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியிலிருந்து பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.