காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் கைது!

காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் கைது!

Share it if you like it

பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதனால், பதற்றத்தை தணிக்க அங்கு 24 மணி நேரத்திற்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து கானிஸ்தான் என்கிற தனிநாடாக அறிவிக்க, சீக்கியர்களில் ஒரு பகுதியினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஆயுதப் போராட்டமும் நடத்தினர். தற்போது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பும் காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கடந்த மாதம் சேர்ந்த மேற்கண்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதை கண்டித்து, அந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கத்தி, வாளுடன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, வாரிஸ் பஞ்சாப் டி என்கிற அமைப்பினரை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை பஞ்சாப் போலீஸார் இன்று கைது செய்திருக்கிறார்கள். ஆகவே, இச்சம்பவம பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதால், போன் அழைப்பு, வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகள் தவிர, இணைய சேவை, எஸ்.எம்.எஸ். சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நாளை மதியம் 12 வரை முடக்கப்படுவதாக பஞ்சாப் உள்துறை மற்றும் நீதித்துறை தெரிவித்திருக்கிறது.


Share it if you like it