நவராத்திரி நாளில் சிவாஜிக்கு வாள்கொடுத்த பவானி அன்னை, கம்பண்ணருக்கு வாள் கொடுத்த மீனாட்சி போன்று நினைக்க வேண்டிய தெய்வம் பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மா வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய அவளும் காளியின் அம்சம் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு வீர்சிவாஜி வரலாற்றோடு தொடர்புபட்டது, இரண்டும் வேறு வேறு அல்ல கட்டபொம்மனும் பூலிதேவனும் வேலுநாச்சியாரும் வீரசிவாஜி தொடங்கி வைத்த போரின் தொடர்ச்சியினை செய்தவர்கள், மொகலாயம் வீழ்ந்தபின் ஆற்காடு நவாபுக்கு ஏன் வரிகட்ட வேண்டும் என வாளேந்தியவர்கள் சிவாஜி தொடங்கிய போரை தொடர்ந்து நடத்திய இந்து மன்னர்கள் வீரசிவாஜி தொடங்கிவைத்த மாபெரும் சுதந்திரபோரினால் மொகலாயம் சரிய அந்த மொகலாயரின் பிரதிநிதியான ஆற்காடு நவாபுக்கு இனி வரிகட்டமாட்டேன் முடிந்தால் நவாப் என்னோடு மோதட்டும் என சவால்விட்டான் கட்டபொம்மன்.
ஒரு வகையில் அவன் கணக்கு சரி, நவாப் மொகலாயரின் பிரதிநிதி, மொகலாயமே சரிந்த நிலையில் நவாபை எளிதில் அகற்றியிருக்க முடியும் பாளையகாரர்களிடம் ஒற்றுமை இருந்திருந்தால் அது சாத்தியமே ஆனால் பிரிட்டிசாரின் இடைவரவு அந்த கணக்கை சொதப்பி நவாபுக்கும் கட்டபொம்மனுக்குமான யுத்தம் பிரிட்டிசாருக்கும் அவனுக்குமாக மாறி இன்று வரலாறே மாறிவிட்டது கட்டபொம்மன் காலத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நின்ற கோட்டை அது, அவனின் வீழ்ச்சிக்கு பின் அது உடைக்கபட்டாலும் பாளையங்கோட்டை சிறையில் இருந்து (இன்றிருக்கும் சிறைஅல்ல அது, இப்பொழுது பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் இருக்கும் அந்த கோட்டை) தப்பி வந்த ஊமைதுரை பின் மறுபடியும் பெரும் கோட்டை கட்டி கடும் யுத்தம் தொடுத்தான்.
பலமுறை வென்ற அவனை கடைசியில் சதியால் பிடித்து கோட்டையின் தென்பக்கம் தூக்கிலிட்டனர் பிரிட்டிசார் பாஞ்சாலங்குறிச்சியினை சுற்றி சுற்றி பிரிட்டிசாரின் சமாதியும் அதுவுமாக ஏகபட்ட வரலாறுகள் இதனை சொல்கின்றன ஊமைதுரையின் வீழ்ச்சிக்கு பின் அக்கோட்டையினை இடித்து எள்ளும் ஆமணக்கும் விதைத்து கோட்டையினை அடையாளமில்லாமல் ஆக்கினர் பிரிட்டிசார், கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா ஆலயம் மட்டும் எஞ்சியது அடுத்த 200 ஆண்டுகளில் அக்கோட்டை இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணானது, கட்டபொம்மனின் வரலாறு மறைக்கபட்டது, மதம் மாற்றும் கும்பல் துணையோடு கட்டபொம்மனின் சுவடே அகற்றபட்டு கல்வி மருத்துவமனை கிறிஸ்தவ தொழுகை கூடம் என பாளையங்கோட்டை முகமே மாறிற்று எனினும் அதே மண்ணில் இருந்து பாரதி, வ.உ.சி, கோபால நாயக்கர், வாஞ்சிநாதன் என சுதந்திர எழுச்சி வந்துகொண்டே இருந்தது, பாஞ்சாலகுறிச்சி காற்று அணலாக அடித்து கொண்டேதான் இருந்தது ஜக்கம்மா அருள் கொடுத்து கொண்டே இருந்தாள், நெல்லையில் இருந்து கட்டபொம்மனின் தொடர்ச்சியக ஊமைதுரை முதல் பலர் வந்தனர்.
ஆயுதபோர் முடிந்த காலங்களில் ஞான நெருப்பாக நெல்லையில் இருந்து எழுந்தான் பாரதி அவனைபோல வ.உ.சி, வாஞ்சிநாதன் என யார் யாரெல்லாமோ எழுந்தார்கள், நெல்லைமண் தன் தீவிர போராட்டத்தை கொடுத்தது, ஜக்கம்மா அதில் சிரித்துகொண்டிருந்தாள், பாரத விடுதலையின் போதே ஜக்கம்மா நிம்மதியாக அந்த ஆலயத்தில் அமர்ந்தாள் தன் பக்தனை வெளிகாட்டினாள், கட்டபொம்னுக்கான அங்கீகாரம் ம.பொ.சியிடம் இருந்தே கிடைத்தது சுதந்திர போராட்ட காலங்களில் ம.பொ.சிவஞானம் கட்டபொம்மன் வரலாற்றை வெளிகொண்டு வந்தார், பின் நாடகம் சினிமா என அவன் வரலாறு பெரிதானது ஆனால் ஊமைதுரை வரலாறு வெளிவராமலே போனது 1970களில் கருணாநிதி கட்டபொம்மனுக்கு அடையாளமிட விரும்பினார், தான் பிரிவினைவாதி அல்ல தேசாபிமானி என இந்திராகாந்திக்கு காட்ட அவருக்கு கட்டபொம்மன் தேவைபட்டான்.
அப்பொழுது சில அகழாய்வுகள் நடந்தன ஒரு சில ஏக்கரிலே அதுவும் முடிந்து வேலியிடபட்டன பின் சுமார் அரை ஏக்கரில் ஒரு கோட்டை கட்டி கட்டபொம்மனுக்கு அடையாளமிட்டார் கருணாநிதி,அங்கும் ஊமைதுரைக்கு சிலை இல்லை எதுவுமில்லை தன் கட்சி தன் குடும்பம் என்றால் பிரமாண்டமாகவும் தேசாபிமானி என்றால் பெயரளிவிலும் செயலாற்றும் கருணாநிதியின் கைவண்ணம் அங்கும் இருந்தது சுமார் 300 ஏக்கரில் இருந்த கட்டபொம்மன் கோட்டை இன்று அரை ஏக்கரில் சுருங்கி நிற்கின்றது, நிச்சயம் அகழாய்வு செய்தால் ஏகபட்ட சுவடுகளை மீட்டெடுக்கலாம் கோட்டையின் உண்மை வடிவும் கிடைக்கும் எங்கெல்லாமோ தோண்டும் தமிழக அரசு இங்கும் சில காரியங்களை செய்யலாம் ஆனால் செய்யமாட்டார்கள் அது என்னவோ தெரியவில்லை இங்கு வீரசிவாஜி ஆண்ட கோட்டைகள் பாழ்பட்டு கிடக்கின்றன, இந்து மன்னர்கள் ஆண்ட கோட்டைகள் அடையாளமற்று அழிந்து கிடக்கின்றன. ஆனால் அந்நியர் மொகலாயர் கட்டிய செங்கோட்டை உள்ளிட்டவையும் பிரிட்டிசாரின் ஜார்ஜ் கோட்டை வில்லியம் கோட்டையெல்லாம் பொலிவாக நிற்கின்றன இவ்வளவுக்கும் சிவாஜி கட்டிய பெரும் கோட்டைகள் இவைகளை விட பிந்தியவையே, அவை அழிந்து கிடப்பதும் அந்நியர் கட்டிய கோட்டை இந்திய அடையாளமாக நிற்பதும் இந்தியர் தலைகுனியும் வேதனை யாருக்கும் இதுபற்றி கவலை இருப்பதாகவும் தெரியவில்லை, தேசத்தின் வரலாற்றுபாடங்களை மாற்றி எழுதாமல் இதெல்லாம் சாத்தியமில்லை பாஞ்சாலங்குறிச்சியின் ஒரே ஆறுதல் தேவி சக்கம்மா ஆலயம், மிக சிறியதாக இருந்த ஆலயத்தை இப்பொழுது பெரிதாக கட்டியிருக்கின்றார்கள்.
முன்பு கட்டபொம்மன் வழிபட்ட திருசெந்தூர் முருகனுக்கும் அக்கோட்டையில் ஒரு ஆலயம் இருந்திருக்கின்றது பின் அது அழியவிடபட்டிருக்கின்றது, அவன் அரண்மனையில் வழிபட்ட முருகன் சிலைகள் திருசெந்தூர் ஆலய மூலையில் கேட்பாரற்று கிடக்கின்றது கட்டபொம்மன் கோட்டைக்குள் ஏன் அவன் வழிபட்ட செந்தூர் முருகன் படம் இல்லையென்றால் அதுதான் திராவிட அரசியல், கருணாநிதி கட்டிய கோட்டையில் அதெல்லாம் எதிர்பார்க்கமுடியாது இத்தனைக்கும் முரசுமண்டபம் பல கட்டி செந்தூர் கோவிவின் பூஜை செய்தி கேட்டபின்பே தன் காரியங்களை தொடங்கியவன் அந்த பக்தன் கட்டபொம்மன், அந்த அளவு அவன் முருக பக்தி உண்டு
முருகன் அடையாளம் இல்லை எனினும் அன்னை ஜக்கம்மா அங்கே அமர்ந்துவிட்டாள் நடந்த மாபெரும் போருக்கும் குருதி ஓடிய வீர வரலாற்றுக்கும் அவளே சாட்சி, கல்லாக நிற்கும் அவள்தான் அங்கு நடந்த வீரவரலாற்றின் ஒரே சாட்சி அவள் கோவிலில் நிற்கும் பொழுது காட்சிகள் விரிந்தன, அவள் ஆலயத்தின் முன்புதான் ஆயிரகணக்கான வீரர்கள் கூடி “வெற்றிவேல் வீரவேல்” என ஆர்பரித்து களமாட சென்றனர்.
அந்த போர்தான் பின் நேதாஜி வரை நீடித்து இன்றும் இந்திய ராணுவமாக எல்லையில் நிற்கின்றது அப்படிபட்ட பெரும் பெருமை கொண்டவள் அந்த ஜக்கம்மா
இந்தியாவில் பிரிட்டிசாருக்கு எதிரான போரை புலித்தேவன் தொடங்கி வைத்தான் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது கட்டபொம்மனும் ஊமைதுரையும்
அவ்வகையில் பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் ஜக்கம்மாவின் ஆசீர்வாதமே இப்போரை தொடங்கி வைத்தது, போரில் ஊமைதுரையும் கட்டபொம்மனும் கொல்லபட்டிருக்கலாம் தற்காலிகமாக பிரிட்டிசாரின் சிலுவை கொடி பறந்திருக்கலாம் கடைசியில் வென்று மீண்டு நிலைத்தது யாரென்றால் அந்த ஜக்கம்மா, அவள்தான் இன்று அங்கே தனித்து நிலைத்து நிற்கின்றாள் கட்டபொம்மன் ஊமைதுரையின் பக்தியினையும் போரையும் பார்த்த அந்த கண்கள் சுதந்திர இந்தியாவினையும் அப்படியே மோடி தலைமையில் சுதந்திர பலன்களை அனுபவிக்கும் இந்தியாவினையும் கண்டு கொண்டிருக்கின்றது. அவ்வகையில் அந்த ஜக்கம்மா நிச்சயம் பெரும் சக்தி படைத்தவள், தேசத்தின் மாபெரும் காவல்காரிகளில் ஒருத்தி கட்டபொம்மனுக்கும் ஊமைதுரைக்கும் வழங்காத அருளையெல்லாம் ஜக்கம்மா மோடிக்கு அருளட்டும், கட்டபொம்மன் கனவையெல்லாம் எம் தலைவன் மோடி அன்னை சக்கம்மாவின் அருளில் நடத்தி கொடுக்கட்டும் கட்டபொம்மனின் சாயல் கொண்ட தலைவன் மோடி தென்னகம் வரும்பொழுது இந்த அன்னையிடமும் ஆசிவாங்கி செல்லட்டும், பலம் பெருகட்டும் வீரசிவாஜிக்கு பவானி போல கட்டபொம்மனுக்கு காவலான அந்த சக்கம்மா தேசத்துக்கு எல்லா நலத்தையும் அருளட்டும், தேசம் செழிக்கட்டும்.
நவராத்திரி நாளில் அன்னை பவானி, மீனாட்சி வரிசையில் பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மாவுக்கும் இடம் உண்டு, அவள் தொடங்கிய போர்தான் இன்று சுதந்திர இந்தியாவாக மலர்ந்திருக்கின்றது. இந்நாட்களில் அவளையும் நினைத்து வழிபடவேண்டியது இந்துக்க்களின் முக்கிய கடமை, ஒவ்வொரு தேசாபிமானிக்கும் நிச்சயம் அவள் அருள் உண்டு.
— திரு.ஸ்டான்லி