நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்… திருமா ரீல் அந்து போச்சு டும் டும் டும்..!

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்… திருமா ரீல் அந்து போச்சு டும் டும் டும்..!

Share it if you like it

கட்சி மேடை என்று நினைத்து நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பேசிய விவகாரத்தையே மீண்டும் பேசியதால், அவருக்கு வாய்ப்பு மறுத்த தற்காலிக சபாநாயகர் ராஜேந்திர அக்ராவால் அமரும்படி கூறியதால் அசிங்கப்பட்டு நிற்கிறார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.

தமிழகத்தின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். நாடாளுமன்றத்தில் அவ்வப்போது இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. தமிழ்நாட்டைத் தவிர வேறு யாருக்குமே தெரியாத தமிழ் மொழியில் நாடாளுமன்றத்தில் பேசுவார். திடீரென்று ‘ஜெய் பீம்’ என்று கத்துவார். இப்படி இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. இப்படித்தான் நாடாளுமன்றத்தில் அரைத்த மாவையே மீண்டும் அரைத்து அசிங்கப்பட்டு நிற்கிறார்.

அதாவது, ‘கடல் நீர்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். கடலோரங்களில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி தரக் கூடாது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய…’ என்று நீட்டி முழங்க முற்பட்டார். ஆனால், அவரை இடைமறித்த தற்காலிக சபாநாயகரும், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான ராஜேந்திர அக்ராவால், ‘ஒரு பேச்சாளர் ஒரு விஷயம் தொடர்பாக ஒரு முறை மட்டுமே பேசலாம். நீங்கள் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப பேசுகிறீர்கள். ஆகவே, நீங்கள் அமருங்கள்’ என்று முகத்தில் அடித்தார்போல் கூறி, அமரச் செய்தார்.

இதனால், நாடாளுமன்றம் மட்டுமல்ல பொது வெளியிலும் அசிங்கப்பட்டு நிற்கிறார் திருமாவளவன். இதையடுத்து, நெட்டிசன்களும், பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை வச்சு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, கடந்த 2-ம் தேதி டெல்லியில் நடந்த தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றிய நிலையில், கடைசியாக திருமாவளவனிடம் கொடுக்க வேண்டிய மெழுகுவர்த்தியை ஊதி அனைத்து அசிங்கப்படுத்தி விட்டார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி. பரூக் அப்துல்லா. இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் அசிங்கப்பட்டிருக்கிறார் திருமா.


Share it if you like it