மோசடி வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி வீரசக்தி கைது !

மோசடி வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி வீரசக்தி கைது !

Share it if you like it

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக முழுவதும் நியோ மேக்ஸ் வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான வீரசக்தி,
பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. மேலும் இவர்கள் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமை இயக்குனர்களின் ஒருவரான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரசக்தி மற்றும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரான பாலசுப்ரமணியன், பாலசுப்பிரமணியத்தின் மகள் லாவண்யா ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் மணீஷா தலைமையிலான காவல்துறையினர் மதுரையில் வைத்து கைது செய்தனர். வீரசக்தி என்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it