பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Share it if you like it

ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாள், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள், இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பெரம்பலூரில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பாலக்கரையில் மாலை 4 மணிக்கு அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள வானொலித் திடல்வரை சுமார் 2 கி.மீ. தூரம் அணிவகுப்பு ஊர்வலம் சென்று, மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த தொண்டர்கள் 225 பேர், சீருடை அணியாத ஆண்கள் 86 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 321 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் வானொலித் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.

கஞ்சமலை சித்தர் திருமரபில் வந்த பொன்னம்பல சுவாமி மடாதிபதி திருவிநாயக வேல்முருக சித்தர் ஆசியுரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாரத் நிறுவனங்களின் உரிமையாளர் கே.என்.ஜெயராமன் தலைமை வகித்தார். கோகுலம் ஜூவல்ஸ் உரிமையாளர் வி.குணசீலன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருச்சி விபாக் சங்கசாலக் கிருஷ்ண.முத்துசாமி சிறப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ். திருச்சி விபாக் கார்யவாஹ் க.செல்வம், பெரம்பலூர் பா.கார்த்திக்கேசவன், ரா.பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Share it if you like it