கட்சி, மதம், மொழி, ஜாதிக்கு, எதிரா பல கோடிப்பேர் இருக்கலாம்..! நம் இந்தியாவிற்கு எதிரா ஒரு பய இருக்கக் கூடாது – பேரரசு பாய்ச்சல்..!

கட்சி, மதம், மொழி, ஜாதிக்கு, எதிரா பல கோடிப்பேர் இருக்கலாம்..! நம் இந்தியாவிற்கு எதிரா ஒரு பய இருக்கக் கூடாது – பேரரசு பாய்ச்சல்..!

Share it if you like it

குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரபல திரைப்பட்ட இயக்குனர் கருத்து.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 13 பேர் வீரமணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்கள் முதல் முக்கிய அரசியல் தலைவர்கள் வரை தங்களது ஆழ்ந்த இரங்கல் செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

நாட்டின் மிக உயரிய ராணுவ பொறுப்பில் உள்ளவர் வீரமணம் அடைந்து உள்ள இச்சூழ்நிலையில், சிலர் தேசத்திற்கு எதிராகவும், பிபின் ராவத்திற்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் மரணம் அடைந்து விட்டால் ஜாதி, மதம், மொழி, இனம், என்று எதனையும் பார்க்காமலும், விருப்பு, வெறுப்புயின்றி, இரங்கல் தெரிவிக்க வேண்டியது நேர்மையான மனிதர்களின் கடமை. ஆனால் ஒரு சிலர் அடுத்தவர்களின் மரணத்தில் கூட தங்களது உண்மையான சுயரூபத்தை மக்களிடம் காட்டி விடுகின்றனர் என்பது உண்மை.

இந்த நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கருத்து, அடுத்தவர்களின் மரணத்தில் சிரிப்பவர்களுக்கும், தேசத்தை விமர்சிப்பவர்களுக்கும், தக்க பதிலடியை கொடுப்பது போல் அமைந்து உள்ளதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.

பேரரசு டுவிட்டர் பதிவு…

நம் நாட்டில் ஒரு கட்சிக்கு எதிரா கோடி பேர் இருக்கலாம்! மதத்திற்கு எதிரா கோடிப்பேர் இருக்கலாம்! மொழிக்கெதிரா, ஜாதிக்கு எதிரா பல கோடிப்பேர் இருக்கலாம் ஆனால் நம் இந்தியாவிற்கு எதிரா ஒரு பய இருக்கக் கூடாது! அவர்களை கண்டறிந்து இந்த நாட்டைவிட்டே துரத்துவது அரசின் கடமையாகும்! ஜெய்ஹிந்த்


Share it if you like it