“நான் உங்கள் அடிமை”… சீன அரசருக்கு ராஜராஜசோழன் கடிதம் எழுதினாரா..? மீண்டும் சீண்டும் பெரியாரிஸ்ட்கள்..!

“நான் உங்கள் அடிமை”… சீன அரசருக்கு ராஜராஜசோழன் கடிதம் எழுதினாரா..? மீண்டும் சீண்டும் பெரியாரிஸ்ட்கள்..!

Share it if you like it

ராஜராஜ சோழன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பெரியாரிஸ்ட்கள் மீண்டும் ராஜராஜ சோழனை சீண்டி இருக்கிறார்கள்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. இவரது ஆட்சியில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பான தகவல்கள் கல்வெட்டில் இருக்கின்றன. மேலும், நீர் மேலாண்மைக்கு ராஜராஜ சோழன் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார். கடந்தாண்டு நவம்பர் மாதம்தான் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா கொண்டாடப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க, கடந்த 2019-ம் ஆண்டு திருப்பனந்தாளில் நடந்த நீலப்புலிகள் இயக்கத் தலைவர் உமர்பரூக்கின் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனின் காலம் இருண்ட காலம். அவரது காலத்தில் ஜாதியக் கொடுமைகள் அதிகம் இருந்தன. பட்டியல் சமூக மக்களின் 1,000-க்கணக்கான ஏக்கர் நிலங்களை, ராஜராஜ சோழன் அபகரித்துக் கொண்டார் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதோடு, இது தொடர்பான வழக்கையும் சந்தித்தார் ரஞ்சித்.

இதன் பிறகு, ராஜாராஜ சோழன் பற்றி பெரியாரிஸ்ட்கள் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை கூறிவருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக ராஜராஜ சோழன் ஹிந்துவா இல்லையா என்கிற விவாதம் நடந்ததெல்லாம் வேடிக்கையான நிகழ்வுகள். இந்த சூழலில்தான், ராஜாராஜ சோழன் சீனாவுக்கு அடிமையாக இருந்ததாக புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள் பெரியாரிஸ்ட்கள். அதாவது, நாகப்பட்டினம் முதல் சொர்ணதீபம் வரை என்கிற புத்தகத்தில், சீன அரசருக்கு ராஜராஜசோழன் எழுதியதாகக் கூறி ஒரு கடிதத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அக்கடிதத்தில் ராஜராஜ சோழன், “உங்கள் அடிமையாகிய நான், பல தலைமுறைகளாக ஒரு காட்டுமிராண்டி நகரில் வாழ்ந்ததால், கொசுபோல சிறியவன். காகித நாய்போல அடக்கமானவன்” என்று தொடங்கி, முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குல்லாய், யானைத் தந்தங்கள், சாம்பிராணி உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழனை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பெரியாரிஸ்ட்களால் பகிரப்பட்டுவரும் இந்த கடிதம்தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it