இந்தியாவை பாராட்டிய பில்கேட்ஸ் !

இந்தியாவை பாராட்டிய பில்கேட்ஸ் !

Share it if you like it

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனாவின் போது இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது உலகில் மிகச் சிறந்த சாதனை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சிறந்த பணியை இந்தியா செய்துள்ளது.ஆனால் தொற்று குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாதிரி மூலம்தான் நாம் தொற்று பாதிப்புகளை உணர முடியும்.

எனவே, நியாயமான விலையில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும். விரைவான பரிசோதனை, தடுப்பு மருந்து தயாரிக்க தயாராக வேண்டும். புதிய தடுப்பூசிகளுக்கு இந்தியா அதிக முதலீடுகளை செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா எப்படி செயல்பட்டது என்பதை மற்ற நாடுகளுக்கு எடுத்துக்கூற நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான கொள்கைகளை விரைவுப்படுத்த கேட்ஸ் அறக்கட்டளை, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது. இதில் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தட்டம்மை, குழந்தைகள் உயிரிழப்பு, பிரசவ கால உயிரிழப்பு உள்ளிட்டவை வெகுவாக குறைந்துள்ளதாக பில்கேட்ஸ் தெரிவித்தார்.


Share it if you like it