வேலையில்லாத இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி: ஏ.டி.எம். பாபாவை தேடும் போலீஸ்!

வேலையில்லாத இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி: ஏ.டி.எம். பாபாவை தேடும் போலீஸ்!

Share it if you like it

ஏ.டி.எம் இயந்திரத்தில் எப்படி கொள்ளையடிப்பது என்ற பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கிறது சுஷாந்த் கோல்ஃப் நகர். இந்த, பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 4-ம் தேதி கொள்ளையர்கள் உடைத்து ரூ.39.58 லட்சத்தை திருடிச் சென்றனர். இதனை தொடர்ந்து, ஏ.டி.எம். இயந்திரம் அருகில் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கொள்ளையர்கள் வந்து சென்ற நீல நிற கார் படம் சிக்கியது. அதன் உரிமையாளர் பிஹாரைச் சேர்ந்த சீதாமர் கி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த வகையில், ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, கோல்ஃப் நகர் காவல் நிலைய ஆய்வாளர், ஏ.டி.எம். கொள்ளை கும்பலில் இடம் பெற்ற நீரஜ் என்பவரிடம் விசாரித்தோம். அவன் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பிஹாரின் சப்ரா பகுதியைச் சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினான். பல மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர்மிஸ்ரா வழங்கி வந்துள்ளார்.

ஏடிஎம் அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன்பின் ஏடிஎம் இயந்திரத்தை 15 நிமிடத்துக்குள் உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்துள்ளார். பயிற்சிக்குப்பின் 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகின்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் கும்பலுக்கு பயிற்சி அளித்த ‘ஏடிஎம் பாபா’ சுதிர் மிஸ்ராவை விரைவில் கைது செய்யவுள்ளோம் என ஆய்வாளர் சைலேந்திர கிரி தெரிவித்துள்ளார்.


Share it if you like it