பிரதமர் ஆசையெல்லாம் நமக்கு  தேவையா? – பிரஷாந்த் கிஷோர் கருத்து!

பிரதமர் ஆசையெல்லாம் நமக்கு தேவையா? – பிரஷாந்த் கிஷோர் கருத்து!

Share it if you like it

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அதாவது, பிரதமர் கனவில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார் ; எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமை இல்லை. பா.ஜ.க.வுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் பா.ஜ.க. செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பா.ஜ.க.வை முந்தினால் மட்டுமே அந்த கட்சிக்கு சவால் விடுக்க முடியும்.

இந்துத்துவா, காந்திய கொள்கை, அம்பேத்கர் கொள்கை, சோசலிஸ்ட், கம்யூனிசம் என பல்வேறு சித்தாந்தங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுபட்டு உள்ளன. இந்த சூழலில் பா.ஜ.க.வை எந்த வகையிலும் தோற்கடிக்க முடியாது. காங்கிரஸை புதுப்பிக்க அந்த கட்சிக்கு சில திட்டங்களை கூறினேன். ஆனால், எனது முயற்சி வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பாரத ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார். இதனால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என கூறினார்.

அதாவது, பிரதமர் கனவில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்கு இந்த பிரதமர் கனவு எல்லாம் தேவையா? என்கிற ரீதியில் பிரஷாந்த் கருத்து அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it