நாட்டை பிளவுபடுத்த மொழியை தவறாக பயன்படுத்திய கட்சிகள்: ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி அட்டாக்!

நாட்டை பிளவுபடுத்த மொழியை தவறாக பயன்படுத்திய கட்சிகள்: ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி அட்டாக்!

Share it if you like it

சில அரசியல் கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதற்கு மொழியை தவறாகப் பயன்படுத்தின. ஆனால், நாங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக மொழியை நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் என்று பிரதமர் மோடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அட்டாக் செய்திருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்கிற வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். அந்த வகையில், மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 70,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்காக நாடு முழுவதும் 45 இடங்களில் ‘ரோஜ்கார் மேளா’ நடந்தது.

பின்னர், மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதை கொண்டாடும் வேளையில், அரசுப் பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். தற்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள். இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

அதேபோல, சில அரசியல் கட்சிகள் அரசு வேலைக்காக விலையை நிர்ணயித்தன. ஆனால், பா.ஜ.க. அப்படியான கட்சி அல்ல. இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நாங்கள் கவனமுடன் செயல்பட்டு வருகிறோம். அவர்களின் கனவுகளுக்காக நாங்கள் உழைக்கிறோம். அதேபோல, நாட்டில் நிலையான ஆட்சி அதிகாரம் நீடித்து இருக்கவும் பாடுபட்டு வருகிறோம். தற்போது நமது நாட்டில் நிலையான அரசியல் சூழல் நிலவுகிறது. எந்த குழப்பமும், அதிருப்தியும் இல்லை. ஆனால், முந்தைய அரசாங்கங்கள் அப்படி இல்லை. பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல் என ஏராளமான குற்றச்சாட்டுகள் முந்தைய அரசின் மீது இருந்தன.

மேலும், நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் மக்களுக்குள் சண்டையை ஏற்படுத்தவும், நாட்டை பிளவுபடுத்தவும் மொழிகளை தவறாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், நாங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மொழியை பயன்படுத்தினோம். கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் யாருக்கும் எந்தவொரு மொழியும் தடையாக இருக்கக் கூடாது என்பதை நமது உறுதி செய்கிறது. இதற்காகத்தான் நுழைவுத் தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே நடத்துகிறோம். இதன் முழு பயனும் நாட்டின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கிடைக்கிறது” என்றார்.


Share it if you like it