வரலாற்று சாதனை படைத்த மோடி அரசு!

வரலாற்று சாதனை படைத்த மோடி அரசு!

Share it if you like it

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிய போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார் பாரதப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனை மெய்ப்பிக்கு வகையில், உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் கப்பல் தான் ஐ.என்.எஸ். விக்ராந்த். மொத்தம் 23,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில், இக்கப்பல் கட்டும் பணி தொடங்கியது. ஆத்மநிர்பர் பாரத் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் உருவாக்கப்பட்ட இக்கப்பலுக்கு முதல் விமானம் தாங்கி கப்பல் நினைவாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இதன், எடை சுமார் 45,000 டன் 262 மீட்டர் நீளமுள்ளது இக்கப்பல். இக்கப்பலின், முதல் சோதனை ஓட்டம் 2021-ல் வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று இருந்தது. இதையடுத்து, ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை பாரதப் பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார். உலகில் 4 நாடுகள் மட்டுமே கப்பல் கட்டும் திறனை பெற்று இருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ஆங்கிலேயர்களின் சின்னத்தை அதிரடியாக மத்திய அரசு நீக்கி இருக்கிறது. இதற்கு, மாற்றாக சத்ரபதி சிவாஜியின் வெற்றி சின்னம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Share it if you like it