இணையத்தை கலக்கும் பிரதமர் மோடியின் நாட்டு நாட்டு பாடல்..!

இணையத்தை கலக்கும் பிரதமர் மோடியின் நாட்டு நாட்டு பாடல்..!

Share it if you like it

பிரதமர் மோடியை வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் நாட்டு நாட்டு பாடல் வரிகள் கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற அடிப்படையில், உலகிலேயே மிக உயரியதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதையும், இரண்டாவது மிகப் பெரிய விருதான கோல்டன் குளோப் விருதையும் தட்டிச் சென்றது. இதன் தொடர்ச்சியாக, இப்பாடல் சர்வதேச அளவில் பிரபலமடைந்தது. வெளிநாட்டு இசைக்குழுவினர் முதல் அரசியல் தலைவர்கள் வரை நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில்தான், நாட்டு நாட்டு பாடல் வரிகளை பிரதமர் மோடிக்குத் தக்கவாறு மாற்றி அமைத்து, வெளியிட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வரவிருக்கும் நிலையில், இப்பாடல் மோடி ரசிகர்கள், பா.ஜ.க.வினர், தேச பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘ஊழல் மலிந்த அரசியல்ல உத்தமராய் ஒருவர் பாரு’ என்று தொடங்கும் இப்பாடல், தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அப்பாடல்…


Share it if you like it