தமிழகத்தில் மோடி அலை : கவிழ்ந்த திராவிடத்தின் தலை !

தமிழகத்தில் மோடி அலை : கவிழ்ந்த திராவிடத்தின் தலை !

Share it if you like it

தமிழகத்தில் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புதிய டெர்மினல் கட்டிடம், கல்பாக்கம் ஐஜிசிஏஆர்-ல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவு அணுஉலை எரிபொருள் மறுசுழற்சி ஆலையை (டிஎஃப்ஆர்பி) நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக, பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.

விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை வரவேற்றார். அதன் பின்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக தேசியகீதம் பாடப்பட்டது. அப்போது அனைவரும் தேசியகீதம் பாடிக்கொண்டிருக்க முதல்வர் ஸ்டாலின் மட்டும் பாடாமல் வாய்கூட அசைக்காமல் சிலை போல் நின்றிருந்தார். அந்த உரையில், 2024 ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழா. இளைஞர்கள் அதிகம் இருக்கும் தமிழகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா இந்த அளவு வளர்ச்சி அடைந்திருப்பதற்கு நமது பல்கலை கழகங்களும் ஒரு காரணம் என்று கூறினார்.சந்திரயான் போன்ற திட்டங்கள் மூலம் இந்திய அறிவியல் அறிஞர்கள் உலக வரைபடத்தில் இடம்பெற்றுள்ளனர்.2014ல் இந்தியாவில் காப்புரிமை பெறுவோரின் எண்ணிக்கை வெறும் 4000 ஆக இருந்தது. ஆனால் தற்போது 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி பேசியதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் பேச வந்தார். அப்போது அரங்கம் முழுவதும் மோடி மோடி என்று தொண்டர்கள் மற்றும் மக்கள் கோஷமிட்டனர். இதனால் ஸ்டாலின் சற்று தடுமாறினார். பிரதமர் மோடி கை அசைத்து அமைதியாக இருக்க சொன்ன பிறகும் மோடி மோடி என்று கோஷமிட்டு கொண்டிருந்தனர். சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் அவர்களை பற்றியும். எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களை பற்றியும் பேசியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it