நம் வரலாற்றில் மறக்க முடியாத காலம்… எமர்ஜென்ஸி பற்றி பிரதமர் மோடி ட்வீட்!

நம் வரலாற்றில் மறக்க முடியாத காலம்… எமர்ஜென்ஸி பற்றி பிரதமர் மோடி ட்வீட்!

Share it if you like it

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், 1975-ம் ஆண்டு எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் அரசுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த எமர்ஜென்ஸி அறிவித்த தினத்தை உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. அரசு கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறது. இந்த சூழலில், எமர்ஜென்ஸி காலத்தில் நடந்தவற்றை பிரதமர் மோடி நினைவு கூர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி, “எமர்ஜென்ஸியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த, துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். எமர்ஜென்ஸியின் இருண்ட நாள்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்ஸி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it