உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) அன்று இந்துக் கோயிலை சில மர்மநபர்கள் அடித்து நொறுக்கிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத சில சமூகவிரோதிகள் கோவிலில் உள்ள சிவன் சிலையை சேதப்படுத்தி உடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட பக்தர்கள் உடனடியாக அப்பகுதி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.கோவில் சிலையை சேதப்படுத்தியதால், ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் காவல்துறையினரும் சென்று விசாரணை நடத்தினர்.
இந்து கோவிலை சேதப்படுத்தியதற்காக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சேதமடைந்த பழைய சிலைக்கு மாற்றாக புதிய சிலையை கோவில் நிர்வாகிகள் பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக ஏப்ரல் மாதம், சம்பலில் உள்ள ஹனுமான் சிலையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடைத்து கைது செய்த இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.