புதுவை முதல்வர் மீது முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

புதுவை முதல்வர் மீது முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Share it if you like it

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ், திமுக, கூட்டணி நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது.. ஆனால் முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கட்சியில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி நமச்சிவாயத்தின் முதல்வர் பதவியை பறித்து கொண்டார்..

நாராயணசாமியின் இந்த கேவலமான செயலை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி  புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்..

வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்த முதல்வர் நாராயணசாமி.. இன்று வரை காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பவில்லை.. இதனால் வேலையில்லாத திண்டாட்டம்  உருவாகி..படித்த பல பட்டதாரி இளைஞர்கள் கொலை, கொள்ளை, மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர்.. இதனால் பல இளைஞர்களின் வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகி விட்டது..

நாராயணசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படாததை கண்டித்து தொடர் போராட்டங்கள் இன்று வரை அங்கு நடைபெற்று வருகிறது. புதுவை முதல்வரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து..  தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை கடந்த 15- ஆம் தேதி அன்று நமச்சிவாயம் அவர்கள் ராஜினாமா செய்தார்.. அவருடன் காங்கிரஸ் கட்சியின் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர்கள் 100 – க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். வளமான பாரத்தை உருவாக்கியது போல வளமான புதுச்சேரி மாநிலம் உருவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்வார் என்னும் நம்பிக்கை தனக்கு இருப்பதால்… பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டதாக நமச்சிவாயம் கூறியுள்ளார்..

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நமச்சிவாயம் திடீர் என்று அக்கட்சியில் இருந்து விலகியதால்.. 2021-ல் நடைபெற உள்ள புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி  நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it