பட்டியலினத்தவர்கள் ரோட்டில் நடப்பது பெரியார் போட்ட பிச்சை – பொன்முடி!

பட்டியலினத்தவர்கள் ரோட்டில் நடப்பது பெரியார் போட்ட பிச்சை – பொன்முடி!

Share it if you like it

பட்டியலினத்தவர்கள் ரோட்டில் நடப்பது பெரியார் போட்ட பிச்சை என தி.மு.க. அமைச்சர் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகநீதி, சுயமரியாதை, சகோதரத்துவம் என மேடை தோறும் பேசக் கூடியவர்கள் தி.மு.க.வினர். இதுதவிர, பட்டியல் சமூக மக்களின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ள கூடியவர்கள். ஆனால், தி.க. மற்றும் தி.மு.க.வினரே அச்சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்தவர் ஆர்.எஸ். பாரதி. இவர், தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசினார்; பட்டியலின மக்கள் இன்று நீதிபதியாக இருக்கிறார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அமைச்சர்; ஆண் பெண் சமம். இந்த ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என குறிப்பிட்டு இருந்தார். நீங்க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் தானே என்று அமைச்சர் பொன்முடி பொது மேடையில் கேட்ட சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, பட்டியல் சமூக மக்களை மீண்டும் இழிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் பொன்முடி பேசிய காணொளி ஒன்று தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அமைச்சர் பொன்முடி பேசியதாவது ;

ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்கள் இருக்கும் தெருவில் நடக்கவே முடியாது. இன்று அந்த நிலைமை உண்டா? இது எல்லாம் எப்படி மாறியது. தந்தை பெரியார் போட்ட பிச்சையால் இது எல்லாம் மாறியது என்பதை யாராவது மறுக்க முடியுமா? என சர்ச்சைக்குறிய வகையில் மீண்டும் பேசியிருக்கிறார்.

Image

Share it if you like it