உங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கிறிஸ்தவ மதகுருவான போப் பிரான்சிஸ் தெரிவித்த கருத்து, கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலக கிறிஸ்தவ மக்களின் தலைமையிடமாகக் கருதப்படுவது இத்தாலி நாட்டிலுள்ள வாடிகன் நகரம். இங்குள்ள மதகுருதான் கிறிஸ்தவ மக்களின் தலைவர். தற்போது, வாடிகனில் போப்பாக இருப்பவர் பிரான்சிஸ். இவர்தான் வாடிகன் திருச்சபையின் வாராந்திரக் கூட்டத்தில் பேசியபோது, இப்படியொரு அதிர்ச்சிக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது, மக்கள் மத்தியில் பேசிய போப் பிரான்சிஸ், ‘உங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர, அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. ஒரே பாலின திருமணத்தை சர்ச் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பரம்பரை பிரச்னைகளில் கூட்டு உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போப் பிரான்சிஸ் கருத்து கூறியிருப்பது கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போப் பிரான்சிஸ்ஸின் இக்கருத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
/https://www.reuters.com/world/support-your-children-if-they-are-gay-pope-tells-parents-2022-01-26/