உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பாரத பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பாரத பிரதமர் மோடி முதலிடம்!

Share it if you like it

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை World of statistics என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. 22 பேர் அடங்கிய இப்பட்டியலில் 76 சதவிகித மதிப்பீட்டில் பாரத பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 2-வது இடத்தையும், மெக்ஸிகோ அதிபர் ஆண்ரஸ் லோபஸ் 3-வது இடத்தையும், 4-வது இடத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், 5-வது இடத்தை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோர் பிடித்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8-வது இடத்தையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 15-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

தி மார்னிங் கன்சல்ட் என்கிற உலகின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனம் வெளியிட்ட பட்டியலிலும் பாரத பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய சர்வேயிலும் பாரத பிரதமர் மோடிதான் உலகின் நம்பர் 1 பிரபலமான தலைவராக இருந்து வருகிறார்.


Share it if you like it