வி.சி.க. நிர்வாகியை கதறவிட்ட பிரபல எழுத்தாளர்!

வி.சி.க. நிர்வாகியை கதறவிட்ட பிரபல எழுத்தாளர்!

Share it if you like it

வி.சி.க. செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மாலை முரசு ஊடக நெறியாளர் இருவரையும் பிரபல எழுத்தாளர் பிரபாகரன் அலறவிட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில், அதிக ஊடகங்களை நடத்தி வரும் கட்சி தி.மு.க. அதேபோல, சில ஊடகங்கள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. விடியல் ஆட்சியில், நிகழும் அவலங்களை சுட்டிக்காட்டாமல், பா.ஜ.க.வை குறிவைத்து தாக்குவதையே தொடர்ந்து சில ஊடகங்கள் செய்து வருகின்றன. அந்த வகையில், பிரபல ஊடகமான நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதம் ஒன்றை நடத்தியது. இந்த விவாதத்தில், பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம், வி.சி.க.வை சேர்ந்த பிரபல ஆபாச பேச்சாளர் வன்னியரசு உள்ளிட்ட சில முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கருத்து வேறுபாடு என ஆயிரம் இருக்கலாம். ஆனால், ஊடகத்தில் எவ்வாறு? பேச வேண்டும் என்கிற அடிப்படை நாகரீகம் கூட தெரியாதவர் வன்னியரசு. இவர், பாரதப் பிரதமர் மோடியை கொலைக்காரன் என மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். உண்மைக்கு புறம்பாக, பேசிய வன்னியரசை கண்டிக்காமல் நெறியாளர் தம்பி தமிழரசன் நடந்து கொண்ட விதம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

https://thecommunemag.com/galatta-vikraman-of-vck-accused-of-sexual-harassment/

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் ஆசிபெற்ற மற்றொரு ஊடகமான மாலை முரசு மனுதர்மம் குறித்து ஆ. ராசா பேசியதை மையமாக வைத்து ஊடக விவாதம் ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பன்முகதன்மை கொண்ட பிரபாகரன் கலந்து கொண்டார். அதேபோல, வி.சி.க.வின் செய்தி தொடர்பாளரும், ஆண் நபர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டிற்கு உள்ளானவருமான விக்ரமன் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய எழுத்தாளர் பிரபாகரன், ஈ.வெ.ரா.வின் போலி சமூக நீதியை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதவிர, ஈ.வெ.ரா.வின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்களிடம் புட்டு புட்டு வைத்தார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், நெறியாளர் பதறினார். அதேபோல, எழுத்தாளர் பிரபாகரன் பேசும் போது விக்ரமன் இடைமறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it