முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சோனியா காந்தி மீது பாய்ச்சல்..! மன்மோகன் சிங் குறித்து தனது புத்தகத்தில் கூறியது என்ன?

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சோனியா காந்தி மீது பாய்ச்சல்..! மன்மோகன் சிங் குறித்து தனது புத்தகத்தில் கூறியது என்ன?

Share it if you like it

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி இயற்கை ஏய்தினார்.. தான் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் புத்தகம் ஒன்றினை எழுதி இருந்தார்..

அடுத்த மாதம் இப்புத்தகம் வெளியாக உள்ள நிலையில்.. அப்புத்தகத்தில் பிரணாப் கூறிய கருத்துக்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது…

  •  2004 ஆம் ஆண்டு தாம் பிரதமர் ஆக்கப்பட்டிருந்தால்.. காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டிருக்காது..
  •  2012-ஆம் ஆண்டு நான் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபின்னர், காங்கிரஸ் தலைமை அரசியலில் முழு கவனம் செலுத்தவில்லை..
  •  சோனியா காந்தி கட்சியை சரியாக கையாள முடியவில்லை என்று அவரை கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
  •  கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதிலே (மன்மோகன் சிங்) அதிக நேரம் செலவிட்டதால், மிக கடுமையாக அவரின் அரசு பாதிக்கப்பட்டது..
  •  மன்மோகன் சிங் நாடாளுமன்றத்துக்கு நீண்ட நாட்களாக வரவில்லை அதனால்  அவருக்கும் எம்.பி-களும் தொடர்புகள் இல்லாமலே போய்விட்டது.. என்று அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

 


Share it if you like it

2 thoughts on “முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சோனியா காந்தி மீது பாய்ச்சல்..! மன்மோகன் சிங் குறித்து தனது புத்தகத்தில் கூறியது என்ன?

  1. பிரணாப் முகர்ஜிக்கு உண்மையிலே தன்னை வளர்த்து ஜனாதிபதி பதவியில் அமரவைத்து அழகு பார்த்த காங்கிரஸ் கட்சி மீது அக்கறை இருந்து இருக்குமானால் , அப்போதே தனது கருத்தை கூறி அதை சரி செய்து இருக்கலாம். உண்மையில் காங்கிரஸ் கட்சி சரியான கொள்கை வழியில் பயணிக்கிறது. அதாவது முழுவதும் சாதாரண மக்கள் பக்கமும் , முழுவதும் கார்ப்பரேட் கள் பக்கமும் சாய்ந்து விடாமல் , தற்போதைய உலக பொருளாதார நிலைக்கு தக்கவாறு தனது கொள்கையை செயல் படுத்தியது. ஆனால் கார்ப்பரேட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை முழுவதும் தங்கள் சார்பாக அமைக்க எண்ணினார்கள். அத்தகைய நிலைக்கு , அந்நிய தேசத்தில் பிறந்தவராக இருந்து , இந்தியாவின் குடிமகளாக தன்னை தகவமைத்து கொண்டு , இந்தியாவில் பிறந்த குடிமகனை விடவும் இந்தியாவின் சாதாரண மக்கள் பற்றி கவலை கொண்டார் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள். தற்போது மறைந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் எழுதியதாக சொல்லப்படும் புத்தகம் அவர்கள் மறைந்த பின் வெளியிடப்படுகிறது. இதில் உள்ள கருத்துக்களுக்கு ஆதரவாக வாதிட பிரணாப் முகர்ஜி இல்லை. எதிராக வாதிடுவதை எதிர்த்து கருத்து சொல்லவும் பிரணாப் முகர்ஜி தவிர வேறு யாராலும் முடியாது. இது மதவெறியர்களின் இன்னுமொரு தவறான அணுகுமுறை என்று கருத இடம் உள்ளது.

  2. என்ன சொன்னாலும் இனி காங்கிரஸ் ஒரு போதும் திருந்தாது

Comments are closed.