கோத்தபய ராஜபக்சே: பா.ஜ.க. தலைவர் செய்த தரமான சம்பவம்!

கோத்தபய ராஜபக்சே: பா.ஜ.க. தலைவர் செய்த தரமான சம்பவம்!

Share it if you like it

இலங்கை அதிபருக்கு எதிராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்த தரமான சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.

இலங்கை அதிபராக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. இவரது, அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்கள் என, பல அரசு உயர் பதவிகளை அனுபவித்தவர்கள். தமிழகத்தை, ஸ்டாலின் குடும்பம் எப்படி? ஆட்டி படைத்து வருகிறதோ? அதே போன்று, இலங்கை மக்கள் மீது முழு ஆதிக்கத்தை செலுத்தி வந்தது ராஜபக்சே குடும்பம்.

Image

இதன் காரணமாக, கொலைகள், கொள்ளைகள் எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல் மற்றும் பசி பட்டினி என நாடு முழுவதும் பல கொடுமைகள் தலை விரித்து ஆடி இருக்கிறன. அந்த வகையில், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதையடுத்து, பொது மக்களிடையே ஏற்பட்ட கடும் கோவம் காரணமாக உள்நாட்டில் புரட்சி வெடித்தன.

இதையடுத்து, ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். அந்த வகையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் என பல நாடுகளில் அடைக்கலம் கேட்டு ஓடும் அவலநிலை தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது.

சீனாவை, நம்பி இந்தியாவை புறக்கணித்ததே, இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் என சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் கூட, மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து பல உதவிகளை இலங்கைக்கு செய்து வரும் ஒரே நாடு இந்தியா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, சுதந்திரத்திற்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்திற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. “அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகின்றன. இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர் வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் வெளியே வருவோம் என்று நம்புகிறோம் என மோடி அரசுக்கு தனது உருக்கமான நன்றியினை தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் உதவியை கோத்தபய ராஜபக்சே நாடி இருக்கிறார். இதுதவிர, தனக்கு தஞ்சம் வழங்கும் படி தனது நட்பு வட்டாரத்தின் மூலம் மத்திய அரசுக்கு தூது அனுப்பி இருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோத்தபய ராஜபக்சே தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் குறித்தும், அவரை இந்தியாவில் அனுமதி கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து, மத்திய அரசு கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு தினமலர் செய்தி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it