அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு காரணம் என்ன?

அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு காரணம் என்ன?

Share it if you like it

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை உடனே, நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்க உக்ரைன் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் நாடு விரும்புகிறது. ஆனால், இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக பனிப்போர் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, உக்ரைன் எல்லை பகுதியில் அதிக அளவில் படைகளை குவிக்க தொடங்கியது ரஷ்யா. இதனிடையே, இரு நாடுகள் மத்தியில் போர் பதற்றம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பெயரில், அந்நாட்டு வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தத் துவங்கினர்.

பதிலுக்கு உக்ரைன் நாடும் ரஷ்யா-வின் மீது போரை தீவிரப்படுத்தியுள்ளது. இது தான், தற்பொழுது உலகம் முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடான இந்தியாவின் உதவியை உக்ரைன் தூதர் நாடி இருந்தார். அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி இருநாட்டு அதிபர்களிடமும் தொலைபேசி வாயிலாக, போரை நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியாவின் சார்பில் வலியுறுத்தி இருந்தார். உலக நாடுகளும் இதே கருத்தினை இரு நாடுகளுக்கும் முன்வைத்து இருந்தது. இந்த நிலையில் தான், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்க மறுத்துள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது. அது குறித்த செய்தியினை பிரபல ஊடகமான தந்தி டிவி வெளியிட்டுள்ளது.


Share it if you like it