அண்ணாமலை பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்வி: ஆளவிடுங்கப்பா… தலைதெறிக்க ஓடிய கனிமொழி!

அண்ணாமலை பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்வி: ஆளவிடுங்கப்பா… தலைதெறிக்க ஓடிய கனிமொழி!

Share it if you like it

அண்ணாமலை மற்றும் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆளவிடுங்கப்பா என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைதெறிக்க ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அக்கட்சியினரின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதனால், இரு கட்சியினருக்கும் மிகப்பெரிய பனிப்போரே நடந்து வருகிறது. இந்த சூழலில், அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச் குறித்து கேள்வி வம்பை விலை கொடுத்தா வாங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக அவர் செய்த காரியம், ஏப்ரல் 14-ம் தேதி வாட்ச் பில்லோடு சேர்த்து, தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டு விட்டார் அண்ணாமலை. இதன் பிறகு, இரு கட்சியினரும் உக்கிரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார் அண்ணாமலை. அப்போது, அங்கு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை போடவே, கர்நாடக மாநில பாடலை முதலில் ஒலிபரப்பும்படி அம்மாநில முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பா கூறினார். இதனால் பாதியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிறுத்தப்பட்டது. உடனே, தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார் தி.மு.க. எம்.பி. கனிமொழி. அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தன்னுடைய கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படிக் கவலைப்படுவார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், அண்ணாமலை பற்றியும், கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, ஆளவிடுங்கப்பா என்பதுபோல பதிலளிக்காமல் தலைதெறிக்க ஓடினார் கனிமொழி. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் எங்கே செந்தில்பாலாஜி போல நாமும் ஏதாவது வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வோமா என்கிற அச்சத்தில் கனிமொழி எஸ்கேப்பாகி விட்டதாக கமென்ட் செய்து வருகின்றனர்.


Share it if you like it