வடக்கு கர்நாடக பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் மதமாற்றம் செய்ய வந்த ஒரு கும்பலின் காணொளி ஒன்று வைரலாக பரவியது. அந்த காணொளியில் பெண்கள் வளையல் போன்ற ஆபரணங்கள் அணிவது தவறு போன்ற போதனை சொற்களை கூறி அப்பாவி மக்களை மூளைசலவை செய்ததுடன் இந்த மதமாற்ற செயல்கள் அரசாங்கதின் அனுமதியுடன் நடைபெறுவதாகவும் கூறியிருந்தனர். இந்தக்காணொளி வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அரேகா ஜானேந்திரா கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம், உத்ரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும், அசாம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.