கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. ஐக்கிய ஆலயத்தை சேர்ந்தவர் பாதிரியார் செர்சோம் ஜேக்கப் என்பவர் அண்மையில காவல் நிலையத்தில் பகீர் புகார் ஒன்றினை தெரிவித்து உள்ளார். அப்புகாரில் கூறியதாவது.
கோவை சி.எஸ். ஐ.திருமண்டலத்துக்கு சொந்தமாக 125 தேவாலயங்கள் உள்ளது. இதில் பாதிரியார்கள் உள்பட பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ. ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் நான் பணியாற்றி வருகிறேன். எனது வருங்கால வைப்பு தொகை கட்டணத்தை சி.எஸ்.ஐ திருமண்டல தலைமை அலுவலகத்திற்கு முறையாக அனுப்பி உள்ளேன்.
இது வரை நான் எவ்வளவு தொகை செலுத்தியுள்ளேன் என்று சி.எஸ்.ஐ நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் அளித்த பதில் எனக்கு திருப்தியை அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது. எனது கணக்கில் தொகை செலுத்தப்படவில்லை என்றகின்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தனர்.
125 ஆலயங்களிலும் இருந்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.25 கோடி. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு முறையாக செலுத்தாமல் மிகப் பெரிய மோசடி அரங்கேறியுள்ளது. என்று பரபரப்பு குற்றச்சாட்டினை காவல்துறையிடம் தெரிவித்து உள்ளார்.
இப்படி பகலிலே பாவம் செய்யும் பாதிரியார்கள் குறித்து. முட்டு சந்து போராளிகள், கழக நெறியாளர்கள், ஏன் வாய் திறப்பது இல்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.